- புற்றான் சோற்றை உண்ண கிராணி,
- அதிக நீர் போதல்,
- தாகம் முதலியவை போகும்.
- தாது பலப்படும்.
- கருவங்கத்தை பற்பம் செய்யும்.
- மணமுள்ள புழுகுச் சட்டத்தினால் மந்த வாதமும்,
- பித்த கபமும்,
- விஷமும் போகும்,
- ஒளியும்,
- தேஜஸும்,
- நிறை ஆயுளும் ,
- திருமகள் அருளும் உண்டாகும்.
- பாலில் உண்டாகும் ஆடையினால் பயித்திய நோயும்,
- பித்த வாந்தியும் ,
- மூர்ச்சையும் ,நீங்கும்.
- மிகு பலமும் ,
- சுக்கிலமும் ,
- ஜடராக்கினியும் விருத்தியாகும்.
- இது துர்பலம் உள்ளவர்களும் சாப்பிடலாம் குற்றம் இல்லை.
- பன்றி இறைச்சியால் கிராணி ,
- கொடிய மூலநோய்,
- வாய்வு,
- ரத்தமூலம்,முதலியன குணமாகும்.
- தாது விருத்தியும்,
- தேக வன்மையும் உண்டாகும்.
- பன்றி நெய்யால் நீர்ச்சுறுக்கு,
- ரத்த மூலம்,
- வாயுவினால் உண்டான தேக வலி,
- அக்கி ,
- தீப்பட்ட புண்கள்,
- ஆறாத குழிரணங்கள்குணமாகும்.
- இது சிறிய வகை ஆடு இனங்களில் ஒன்று .
- பள்ளையாட்டு கறிக்கு அஜலம்,
- மந்தாக்கினி,
- நீங்காத அருசி,
- திரிதோஷ மிஸ்ரம்,
- கப தோஷம்,
- வாதாதிக்கம் இவைகள் உண்டாகும்.
- நற்பவள பற்பத்தினால் கபம் .
- சுர தோஷம்,
- தாகம்,
- மேக அழலை,முதலியவை சாந்தப்படும்.
- இருமல்,
- அரோசகம்,
- கீட விஷம்,
- சுக்கில பலவீனம்,
- விதாகம்,
- நாவில் சுறசுறப்பு ஆகியன நீங்கும்.
- சரீர காந்தியுண்டாகும்.