- வெள்ளைச் சங்கினால் உதிரபித்தம் ,
- விழிரோகம் ,
- வாததோஷம் ,
- இசிவு ,
- முளைக்கட்டி இவைகள் நீங்கும்.
- தீபனம் உண்டாகும்.
- வெள்ளாடு வெண்ணெயால் சுரரோகம் ,
- பித்தநோய் ,
- கரப்பான் ,ஆகியன நீங்கும்.,
- பசியை உண்டாக்கும்.
- வெள்ளாடு மோரை உபயோகப்படுத்த நீர்க்கட்டை உடைத்துவிடும் ,
- பிரமேகத்தை நீக்கி நல்ல தேஜஸை உண்டாக்கும்.
- வெள்ளாடுப் பாலினால் வாதபித்த தொந்தம் ,
- சுவாசரோகம் ,
- சீதங்கலந்த பேதி ,
- கபதோஷம் ,
- விரணம் ,
- வாதத்தா லுண்டாகிய வீக்கம் ,முதலிய துன்பங்கள் நீங்கும்.
- நல்ல பசி உண்டாகும் .
- வெள்ளாடு நெய்யை யுண்ணில் அதிக சிலேத்துமாதிக்கத்தையும்,
- வாதகோபத்தையும் போக்கும்,
- சரீரத்தை வளர்க்கும் .,
- கண்ணுக்கு ஒளியை உண்டாக்கும்.
- பத்தியத்திற்கு ஆகும்.
- வெள்ளாடு தயிரை உண்பவர்க்கு அதிக நன்மைகளை தரும்.
- இதன் ஆடையானது எளிதில் ஜீரணிக்காமல் மந்தத்தை உண்டாக்கும்.,
- ஆனாலும் வெப்பகாலத்தில் உண்ண நன்மையைத் தரும்.
- வெள்ளாடு மூத்திரம் வீக்கம் ,
- பாண்டு ,
- பற்பல வீக்கத்தின் எரிச்சல் ,
- ரத்த கபம்,
- துர்மாமிசம்,
- மகோதரம் இவைகள் நீங்கும்.