- வெள்ளைச் சங்கினால் உதிரபித்தம் ,
- விழிரோகம் ,
- வாததோஷம் ,
- இசிவு ,
- முளைக்கட்டி இவைகள் நீங்கும்.
- தீபனம் உண்டாகும்.
- வெள்ளாடு வெண்ணெயால் சுரரோகம் ,
- பித்தநோய் ,
- கரப்பான் ,ஆகியன நீங்கும்.,
- பசியை உண்டாக்கும்.
- வெள்ளாடு மோரை உபயோகப்படுத்த நீர்க்கட்டை உடைத்துவிடும் ,
- பிரமேகத்தை நீக்கி நல்ல தேஜஸை உண்டாக்கும்.
- வெள்ளாடுப் பாலினால் வாதபித்த தொந்தம் ,
- சுவாசரோகம் ,
- சீதங்கலந்த பேதி ,
- கபதோஷம் ,
- விரணம் ,
- வாதத்தா லுண்டாகிய வீக்கம் ,முதலிய துன்பங்கள் நீங்கும்.
- நல்ல பசி உண்டாகும் .
- வெள்ளாடு நெய்யை யுண்ணில் அதிக சிலேத்துமாதிக்கத்தையும்,
- வாதகோபத்தையும் போக்கும்,
- சரீரத்தை வளர்க்கும் .,
- கண்ணுக்கு ஒளியை உண்டாக்கும்.
- பத்தியத்திற்கு ஆகும்.
- வெள்ளாடு தயிரை உண்பவர்க்கு அதிக நன்மைகளை தரும்.
- இதன் ஆடையானது எளிதில் ஜீரணிக்காமல் மந்தத்தை உண்டாக்கும்.,
- ஆனாலும் வெப்பகாலத்தில் உண்ண நன்மையைத் தரும்.
- வெள்ளாடு மூத்திரம் வீக்கம் ,
- பாண்டு ,
- பற்பல வீக்கத்தின் எரிச்சல் ,
- ரத்த கபம்,
- துர்மாமிசம்,
- மகோதரம் இவைகள் நீங்கும்.
- வெள்ளாட்டிறைச்சியை உண்பவருக்கு உட்சுரங்களும் ,
- வாத பயித்தியமும் ,
- சயமும் போகும்.
- சரீர புஷ்டியும் ,
- வீரியமும் விளையும்.
- பத்தியத்திற்கான வெண்புறாக் கறி வாதபித்தம் ,
- ஜலமேகம் ,
- விரணம் ,
- வெண்குஷ்டம் ,
- கரப்பான் ,
- சொறி இவைகளை நீக்கும்.
- விலாங்கு மீனை அதிகமாக தின்றால் கபாதிக்கம் ,
- அரோசகம் ,
- தாதுவிருத்தி ,
- தவளைச்சொறி ,
- விரணம் ,
- கடுவன் இவை உண்டாகும்.
- உருசியையுடைய வான்கோழிக்கு விந்துவும் ,
- மகிழ்ச்சியும் ,
- சிலேத்தும பந்தமும் ,
- கரப்பானும் உண்டாகும்.
- வாதகுணமுள்ள வாளைமீன்,
- தேகத்தைச் செழுமையாக்கித் தாது விருத்தியை உண்டாக்கும்.
- அகாலத்தில் புசிக்கில் வாயுவாகும்.
- வாத்துக் கறியையுண்ணில் ,கசிவு வறண்டு சிவந்தாறிய விரணம்,
- கிரந்தி ,
- கோழை ,
- அருசி ,இவைகள் அதிகரிக்கும்.
- சுக்கில தம்பனமாகும்.
- உருசியுள்ள வரிப்புறாக் கறியைத் தின்றால் வாயுவொடு கூடிய பித்தமும் ,
- பலவித வீக்கங்களும் போகும்.
- யானை மூத்திரத்தால் அதிதூலநோய்,
- வீக்கம் ,
- வாய்வு ,
- கிருமிவிஷம்,
- கருங்கரப்பான்,இவைகள் போகும்.
- வன்மையும் ,
- சரீரபுஷ்டியும் உண்டாகும்.
- தேனும்,பாலும் கலந்த ருசிபோன்ற யானைப்பாலைக் குடிப்பவர்களுக்கு வாதகோபம் நீங்கும்.
- சுக்கிலவிருத்தியும் ,
- மிகுந்த பலமும் உண்டாகும்.
- பித்த சம்பந்த தேக அழகும் உண்டாகும்.
- தேன் மெழுகினால் பாரிசவாயு ,
- வீக்கம் ,
- கபநோய் ,
- வாதகோபம் ,
- சுக்கில நஷ்டம் ,
- சிலேத்துமோஷ்டரோகம் ,
- விஷம் ,
- பைசாசம் ,
- குஷ்டம் ,
- ஆகந்துக விரணம்,
- சத்தியோ விரணம் ,இவைகள் நீங்கும்.