- முள்ளம்பன்றி இறைச்சி காட்டுப்பன்றி இறைச்சியை விட மேலானது.
- அதிகரித்த வாயு ,
- மூலம்,
- சருமகீலிகம்,
- குதப்பிரம்ஸ ரோகம்,
- குடல்விருத்தி முதலியவை குணமாகும்.
- தேகம் பலப்படும்.
- முலைப்பாலால் ஏழுவகைத் தோஷங்கள் ,
- வெப்பம்,
- சந்நிபாதம் ,
- வாதபித்தம்,
- நாவறட்சி ,
- கபசுரங்கள்,
- திரிதோஷம் ,
- வாத கிரிச்சரம்,இவைகள் நீங்கும்.
- மருந்துகளின் அனுபானத்திற்கும்,கலிக்கதிக்கும் ஆகும்.
- தேவாமிர்தத்திற்கு ஒப்பானது.
- உஷ்ண தேகமுடைவர் சாப்பிட தேகஉஷ்ணம் குறைத்து சாந்தபடும்.
- குளிர்ந்த தேகமுடைவர் சாப்பிட உஷ்ண தேகமாகும்.
- முத்துச்சுண்ணத்தினால் நீடித்த பேதி,
- கபக்கட்டு,
- மலக்கிருமி,
- வயிற்று நோய்,
- வாத அரோசகம்,ஆகியன நீங்கும்.
- முத்துச்சிப்பியினால் கபக்கோழை,
- காசம்,
- சயம்,
- மேகப்பிடகம் ,
- சிலேத்தும ஆதிக்கம் ,ஆகியன தீரும்.
- ஜீவரத்தினம் என்னும் முத்தினால் அஷ்திசுரம்,
- வீக்கம் ,
- அரோசகம் ,
- மெலிவு,
- விழிநோய்,
- அக்கினி கீட விஷம்,
- சுட்கசிலேத்துமம்,
- குரல்வளையில் சத்துக்கின்ற கோழை,
- தைரியமின்மை,
- வீரிய நாசம் இவைகள் போகும்.
- முதலை இறைச்சியால் சிசுக்களுக்கு வரும் கக்கிரும்பலும்,
- வாயுவும் ,கபமும் விலகும்.
- முசுறு முட்டையினால் மஹாவாதம்,
- மந்தம்,
- இசிவு,
- ஐவிதவலி,
- நீர்க்கபநோய்,
- சன்னி இவைகள் போகும்.
- முயல் கறியினால் விரைவாகிய நடைகள் உண்டாகும்.
- பயித்தியம் ,
- சயம்,
- இருமல் ,
- மகா சுவாசம்,
- வாயு,
- மலசிக்கல் தீரும்.
- மான் இறைச்சிக்குத் தொந்த நோய்,
- ஈளை,
- மாமிச பகந்தரம்,
- கழல் வாயு,
- வாதப் புடை,இவைகள் போகும்.
- கண்புகைச்சலும்,பித்தமும் உண்டாகும்.
- மாட்டு இறைச்சியினால் பலவியாதிகள் உண்டாகும்.
- போக சக்தியை அதிகப்படுத்தும்.
- அற்ப வாதரோகங்களை கண்டிக்கும்.
- எளிதில் சீரணம் ஆகாது.
- பித்தத்தையும்,கபத்தையும் அதிகப்படுத்தும்.
- தேகத்தை நன்கு வளர்க்கும்.
- குன்ம (வயிறு )நோயாளிகளுக்கு உதவாது,
- தொண்டைக்கபமும்,நாளுக்குநாள் இளைக்க வைக்கின்ற சுரம் முதலியவைகளால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த இறைச்சியை உண்ண நன்மைதரும்.
- அதிக உழைப்பாளிகளுக்கும்,சுறுசுறுப்புடையவர்களுக்கு ஏற்ற உணவாகும்.
- இந்த உணவை பழக்கத்தில் கொள்ளத் தேகத்தில் ஒருவித புலால் நாற்றத்தை உண்டாக்கும்.
- மாடப்புறாக் கறியால் தீபாக்கினியும்,
- சுக்கிலமும் பெருகும்,
- வாதப் பிரகோபம் நீங்கும்.
- இந்த கறி பத்தியத்திற்க்கு ஆகும்.
- நாவிற்கு உருசியுள்ள மனைப்புறாக் கறி மருந்தை முறிப்பதும் தவிர
- கரப்பான்,
- சருமச்சொறி ,
- தாதுவிருத்தி இவைகளை உண்டாக்கும்.
- மயில் நெய்யை,மேற்றேய்ப்பதனால் நரம்புகளிற் காணுகின்ற இசிவு,
- விரற்கணுக்களில் காணுகின்ற வீக்க நோய்,
- கை கால்களில் காணுகின்ற பிடிப்பு முதலியவை நீங்கும்.
- எத்தகைய கடின நோய்களாக இருப்பினும் குணமாவது திண்ணம்.
- உஷ்ணமுள்ள மயில் கறி சாப்பிட்டால் கீல்களில் குத்தல்,
- வாத சோணிதம்,
- கப பித்தம்,
- அதிகமுள்ள கபம் இவைகள் நீங்கும்.
- தீபனத்தைத் தரும்.
- தாதுவிருத்தியையும் உண்டாக்கும்.
- இதன் மலத்தை நெருப்பனலில் போட்டு புகை உண்டாக்கப் பாம்பு முதலிய விஷ ஜெந்துக்கள் அணுகாது.
- பத்தியத்திற்குதவியான மணிப்புறாக் கறியைத் தின்றால்
- வாதப் பிடிப்பு,
- சயம்,
- வயிற்று நோய்கள்,
- வாதாதிக்கம்,இவைகள் போகும்.
- மடையான் கறியை உண்டவருக்கு கடுவனும்,
- நமைக்கிரந்தியும்,
- வலுத்த சிலேத்துமமும்,
- வாத தொந்தமும், உண்டாகும்.
- மடவைமீனால் வாதப்பிணி,
- அக்கினிமந்தம்,
- மூலமுளை,
- ஆந்திர பித்தவாதம்,
- குத்தல்,
- கடுவன்,இவைகளை தரும்.
- மாமிச விருத்தியாகும்.
- மஞ்சள்நிறத்தை உடைய பொன்னம்பரால் தாது பலப்படும்.
- ஐம்புலன்களின் அறிவு விருத்தி ஆகும்.
- நரம்புகள் வன்மை பெறும்.
- பட்சவாதம் குணமாகும்.
- மருந்துக்கு சமமான பேராரால் மீனுக்குத் தேகத்தில் உள்ள பலவித நோய்களும்,
- பழய மலக்கட்டும்,நீங்கிச் சவுக்கியம் உண்டாகும்.
- பெருச்சாளியின் வயிற்றைக் கீறிக்குடலை நீக்கி மூழ்க நல்லெண்ணெய் விட்டுப் பதமுறக் காய்ச்சி வெண்குட்டத்திற்குத் தடவிவர ஒரு மண்டலத்தில் சுபாவ நிறமடையும்..
- பூநாகம்,or மண்புழுவினால் மிகவும் துன்பத்தை விளைவிக்கிற தாகமும்,
- ஏழுவித அசாத்திய சந்நிபாத சுரங்களும்,
- ஊருஸ்தம்பம் என்கிற தொடை வாதமும்,
- சிலேத்தும நோய்களும் நீங்கும்.