பறவைகள், மீன்கள் ,விலங்குகள்,ஊர்வன,பூச்சிகளின் மருத்துவ குணங்கள்
ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016
சனி, 20 ஆகஸ்ட், 2016
பசுவின் பால்.(வரிசை எண்.98.).
- பசுவின் பாலைக் குழந்தைகள் முதல் விருத்தருக்கும்,
- விரண ரோகிகளுக்கும்,
- துர்ப்பலம் உடையவர்களுக்கும்,
- இளைத்தவர்களுக்கும்,
- மிதமிஞ்சிய போகத்தால் நரம்பு தளர்ந்தவர்களுக்கும் ,
- நெடுநாள் சுரத்தில் கஷ்ட படுகிறவர்களுக்கும்,
- மூளை சம்பந்தமான வியாத்திஸ்தர்களுக்கும்,
- வாத ரோகிகளுக்கும்,
- குடல் சம்பந்தமான வியாத்திஸ்தர்களுக்கும்,
- அஜீர்ண பேதி உடையவர்களுக்கும்,
- நீர்த்தாரை விரண முடையவர்களுக்கும், தினமும் காய்ச்சி ஆடை நீக்கி குடிப்பது நல்லது.
- புராண சுரம்,
- சூலை ,
- பிரமேகம் ,
- துர்ப்பலம் ,
- அதி சுஷ்க ரோகம், ஆகியவர்களுக்கும் ஆகும்.
பசுவின் தயிர்.(வரிசை எண்.96.).
- பசுவின் தயிரை உண்டால் பசிஉண்டாகும்.
- இசிவு ,
- சீரண ரோகம்,
- தாகம்,
- ஆயாசம் ,
- காசம்,
- சரீர எரிச்சல் இவைகள் நீங்கும்.
- பகல் சாப்பாட்டின் இறுதியில் தயிர் சேர்ப்பது வழக்கம்.இது தேகத்தில் உள்ள வெப்பத்தை தணித்துத் தாகத்தை அடக்கும்.
- பித்த சம்பந்தமான ரோகிகளும்,மூல ரோகிகளும்,உஷ்ண பேதி உடையவர்களும்,சீதபேதி உடையவர்களும் சாப்பிட நன்மை உண்டாகும்.
- சிறிது புளிப்பு சுவை இருப்பின் ஜீரண சக்தியை விஷேசப்படுத்தும்.
- இதை இரவு உணவில் சேர்க்க கூடாது.சேர்கின் உடலுக்கு தீங்கை விளைவிக்கும்.
வெள்ளி, 19 ஆகஸ்ட், 2016
வியாழன், 18 ஆகஸ்ட், 2016
திங்கள், 8 ஆகஸ்ட், 2016
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)